மின் ஊழியர்களுக்கான கால்பந்துப் போட்டி: கோவை அணி சாம்பியன்
கோவையில் நடைபெற்ற மின் ஊழியர்களுக்கான கால்பந்துப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் கோவை அணி 3-0 என்ற புள்ளிகள் கணக்கில் சென்னை அணியை வீழ்த்தி, சாம்பியன் கோப்பையை வென்றது.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் சார்பில் அனைத்து மண்டலங்களுக்கு இடையிலான மின் ஊழியர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் கடந்த 1-ஆம் தேதி தொடங்கின.
இதில், நான்காவது நாளான ஞாயிற்றுக்கிழமை அரை இறுதிப் போட்டிகள் நடைபெற்றன. இதில், முதலாவது ஆட்டத்தில் சென்னை அணி 3-0 என்ற புள்ளிகள் கணக்கில் திருச்சி அணியை வீழ்த்தியது. இரண்டாவது அரை இறுதி ஆட்டத்தில் கோவை அணி 3-0 என்ற புள்ளிகள் கணக்கில் திருநெல்வேலி அணியை வென்றது.
அதைத்தொடர்ந்து, இறுதிப் போட்டியில் சென்னை - கோவை அணிகள் மோதின. இதில், கோவை அணி 3-0 என்ற புள்ளிகள் கணக்கில் சென்னை அணியை வீழ்த்தி சாம்பியன் கோப்பையை வென்றது.
பூப்பந்து விளையாட்டு, அரை இறுதிப் போட்டியில் வேலூர் அணி 35-32, 32-35, 35-27 என்ற புள்ளிகள் கணக்கில் திருநெல்வேலி அணியை வென்றது. இரண்டாவது அரை இறுதியில் சென்னை அணி 35-33, 35-28 என்ற புள்ளிகள் கணக்கில் கோவை அணியை வென்றது.
இதைத்தொடர்ந்து நடைபெற்ற இறுதிப் போட்டியில் வேலூர் அணி 35-33, 35-27 என்ற புள்ளிகள் கணக்கில் சென்னை அணியை வீழ்த்தி கோப்பையை வென்றது. இதேபோல, பிரிட்ஜ் விளையாட்டில் இறுதிப் போட்டியில் சென்னை அணி 175-142 என்ற புள்ளிகள் கணக்கில் கோவை அணியை வென்றது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
