நடிகர் விஜய்யின் 60-வது படத்தின் பெயர்: அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது!

தினமணி  தினமணி
நடிகர் விஜய்யின் 60வது படத்தின் பெயர்: அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது!

நடிகர் விஜய்  நடித்து வரும் அவரது 60-வது படத்தின் பெயர் மற்றும் 'முதல் பார்வை' போஸ்ட்டர் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த திரைப்படத்திற்கு ‘பைரவா’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.  இதில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இவர்களுடன் டேனியல் பாலாஜி, ஹரிஷ் உத்தமன், சதீஷ், ஜெகபதி பாபு, சுதான்ஷூ பாண்டே, ஆடுகளம் நரேன், ஸ்ரீமான், அபர்ணா வினோத், ஒய்.ஜி. மகேந்திரன் உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள்.

விஜய் நடித்து வெளிவந்த அழகிய தமிழ்மகன் டத்தை இயக்கிய பரதன் இப்படத்தை இயக்குகிறார். இருவரும் சுமார் 9 வருடத்திற்கு பிறகு மீண்டும் இணைந்துள்ளனர்.

இப்படத்திற்கு சந்தோஷ் நாரயணன் இசையமைக்கிறார். விஜயா ப்ரொடெக்ஷன்ஸ்  நிறுவனம் படத்தை தயாரித்து வருகிறது.

மூலக்கதை