மிளகாய்ப் பொடி குண்டுகள்: ராஜ்நாத் சிங் ஒப்புதல்
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்துவதற்கு பெல்லட் ரக தோட்டாக்களுக்குப் பதிலாக மிளகாய்ப் பொடி குண்டுகளை பயன்படுத்துவதற்கு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சனிக்கிழமை ஒப்புதல் அளித்தார்.
இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சக மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:
காஷ்மீரில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கட்டுப்படுத்த பெல்லட் ரக தோட்டாக்கள் பயன்படுத்தப்பட்டபோது ஏராளமானோரின் கண் பார்வை பறிபோனது.
இதையடுத்து, இந்தச் சம்பவம் தொடர்பாக ஆய்வு செய்ய மத்திய உள்துறை அமைச்சக இணைச் செயலர் டி.வி.எஸ்.என். பிரசாத் தலைமையில் 7 பேர் கொண்ட உயர் நிலைக் குழு அமைக்கப்பட்டது.
அந்தக் குழு, மத்திய அரசிடம் கடந்த மாதம் 29-ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்தது. அந்த அறிக்கையில், மிளகாய்ப் பொடி குண்டுகளை பயன்படுத்தலாம் என்று அந்தக் குழு பரிந்துரை செய்திருந்தது. இதுதொடர்பான கோப்புகளுக்கு, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது ஒப்புதலை அளித்தார். இதையடுத்து, காஷ்மீர் பள்ளத்தாக்குக்கு ஆயிரம் மிளகாய் பொடி குண்டுகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அவை காஷ்மீரை ஞாயிற்றுக்கிழமை (செப்.4) சென்றடையும் என்று மத்திய உள்துறை அமைச்சக மூத்த அதிகாரி தெரிவித்தார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
