டிஎன்பிஎல்: காரைக்குடி அணி வெற்றி
தமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பிஎல்) டி20 கிரிக்கெட் போட்டியில் காரைக்குடி காளை அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணியைத் தோற்கடித்தது.
திருநெல்வேலியில் சனிக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த காரைக்குடி அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 111 ரன்கள் சேர்த்தது. அந்த அணியில் கேப்டன் பத்ரிநாத் அதிகபட்சமாக 49 ரன்கள் எடுத்தார். அவருக்கு அடுத்தபடியாக கணபதி 28 ரன்கள் எடுத்தார்.
தூத்துக்குடி அணி தரப்பில் அஸ்வின் கிறிஸ்து 3 விக்கெட்டுகளையும், வாஷிங்டன் சுந்தர் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
பின்னர் பேட் செய்த தூத்துக்குடி அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 103 ரன்கள் எடுத்து தோல்வி கண்டது. அந்த அணியில் அதிகபட்சமாக காந்தி 27 ரன்களும், ஆனந்த் 24 ரன்களும் எடுத்தனர்.
காரைக்குடி தரப்பில் கணபதி 3 விக்கெட்டுகளையும், ராஜ்குமார் 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர். காரைக்குடி வீரர் கணபதி ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
