சீன ஓபன் ஸ்குவாஷ்: காலிறுதியில் கோஷல், ஜோஷ்னா தோல்வி

தினமணி  தினமணி

சீன ஓபன் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியின் காலிறுதியில் இந்தியாவின் செளரவ் கோஷல், ஜோஷ்னா சின்னப்பா ஆகியோர் தோல்வி கண்டனர்.

சீனாவின் ஷாங்காய் நகரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற காலிறுதியில் கோஷல் 9-11, 3-11, 11-8, 11-5, 9-11 என்ற செட் கணக்கில் எகிப்தின் கரீம் அப்டெல்லிடம் தோல்வியடைந்தார்.

மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் ஜோஷ்னா சின்னப்பா 7-11, 5-11, 6-11 என்ற நேர் செட்களில் இங்கிலாந்தின் லாரா மஸாரோவிடம் தோல்வி கண்டார்.

மூலக்கதை