தங்கம் பவுனுக்கு ரூ.160 அதிகரிப்பு: வெள்ளி ஒரே நாளில் ரூ. 1325 உயர்வு

தினமணி  தினமணி
தங்கம் பவுனுக்கு ரூ.160 அதிகரிப்பு: வெள்ளி ஒரே நாளில் ரூ. 1325 உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.160 அதிகரித்து ரூ.23,560-க்கு விற்பனையானது. இதேபோல், வெள்ளிக்கிழமை ரூ.45,435 ஆக இருந்த ஒரு கிலோ கட்டி வெள்ளியின் விலை ஒரே நாளில் ரூ.1,325 அதிகரித்து சனிக்கிழமை ரூ.46,760-க்கு விற்கப்பட்டது.

சனிக்கிழமை விலை நிலவரம் (ரூபாயில்):

ஒரு கிராம் தங்கம் 2,945

ஒரு பவுன் தங்கம் 23,560

ஒரு கிராம் வெள்ளி 50

ஒரு கிலோ வெள்ளி 46,760

வெள்ளிக்கிழமைவிலை நிலவரம் (ரூபாயில்)

ஒரு கிராம் தங்கம் 2,925

ஒரு பவுன் தங்கம் 23,400

ஒரு கிராம் வெள்ளி 48.60

ஒரு கிலோ வெள்ளி 45,435

மூலக்கதை