ஆஸி. கிரிக்கெட் வீரர் லென் மடாக்ஸ் காலமானார்
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மூத்த டெஸ்ட் கிரிக்கெட் வீரரான லென் மடாக்ஸ் (90) வெள்ளிக்கிழமை காலமானார்.
விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனான மடாக்ஸ் 1954 முதல் 1956 வரையில் 7 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். 1977-ஆம் ஆண்டு இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிய ஆஸ்திரேலிய அணியின் மேலாளராக இருந்தார்.
இதுதவிர 112 முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ள மடாக்ஸ், ஆஸ்திரேலிய அணியின் தேர்வுக்குழு தலைவராகவும், விக்டோரியா கிரிக்கெட் சங்கத்தின் இயக்குநராகவும் இருந்துள்ளார்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஜேம்ஸ் சுதர்லேன்ட் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "லென், தனது வாழ்நாள் முழுவதும் கிரிக்கெட்டுக்காக சிறப்பான பங்களிப்பை செய்துள்ளார். அவர் வீரராக மட்டுமின்றி, தலைசிறந்த நிர்வாகியாகவும் செயல்பட்டவர்.
அவருடைய மரணம் மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்போது கிரிக்கெட் மிகப்பெரிய வளர்ச்சியடைந்திருப்பதற்கு அவரும் மிகப்பெரிய பங்களிப்பை செய்துள்ளார். அதற்காக அவரை பாராட்டியாக வேண்டும்' என குறிப்பிட்டுள்ளார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
