இளம் வீரர்களை ஊக்கப்படுத்துகிறது டிஎன்பிஎல்
தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் இளம் வீரர்களை ஊக்கப்படுத்துவதாக உள்ளது என்றார் கிரிக்கெட் வீரர் எல்.பாலாஜி.
திருநெல்வேலி அருகே சங்கர்நகரில் உள்ள இந்தியா சிமென்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் வெள்ளிக்கிழமை பயிற்சியில் ஈடுபட்ட இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரும், தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி வீரருமான எல்.பாலாஜி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சனிக்கிழமை (செப்.3) நடைபெறும் போட்டியில் தூத்துக்குடி அணியும், காரைக்குடி காளை அணியும் மோதுகின்றன. இந்த பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் இளம் வீரர்களை ஊக்கப்படுத்துவதாக அமைந்துள்ளது. எங்களது அணியில் அனைத்து வீரர்களும் வெற்றிக்காக கடுமையாக போராட தயாராக உள்ளனர்.
பேட்டிங், பெளலிங், பீல்டிங்கில் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறோம். எதிர்அணியை பற்றி கவலைப்படாமல், எங்களது ஆட்டத்தில் மட்டுமே கவனம் செலுத்த முடிவு செய்துள்ளோம். டி20 போட்டிகளைப் பொருத்தவரை, எதுவும் நடக்கலாம். சூழ்நிலைக்கு ஏற்ப வெற்றிக்கான முயற்சிகளை எடுப்போம் என்றார் அவர்.
காரைக்குடி அணி வீரர் பத்ரிநாத் கூறுகையில், ரஞ்சி கிரிக்கெட் போட்டி நடந்தபோது இந்த மைதானத்தில் விளையாடியுள்ளேன்.
அதனால் இந்த ஆடுகளம் பற்றி தெரியும். வரும் போட்டியில் வெற்றிபெற எங்களது அணி வீரர்கள் கடுமையாக உழைப்பார்கள். அதற்காக தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகிறோம் என்றார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
