அசோக் லேலண்ட் வாகன விற்பனை 6% சரிவு

தினமணி  தினமணி

ஹிந்துஜா குழுமத்தைச் சேர்ந்த அசோக் லேலண்ட் நிறுவனத்தின் வாகன விற்பனை சென்ற ஆகஸ்ட் மாதத்தில் 6% சரிவைக் கண்டது.

இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

ஆகஸ்டில் வாகன விற்பனை எண்ணிக்கை 10,897-ஆக இருந்தது. கடந்த ஆண்டின் இதே கால அளவில் விற்பனையான 11,544 வாகனங்களுடன் ஒப்பிடுகையில் இது 6% குறைவாகும்.

கனரக மற்றும் நடுத்தர வர்த்தக வாகனங்களின் விற்பனை 8,903 என்ற எண்ணிக்கையிலிருந்து 8% குறைந்து 8,201-ஆக காணப்பட்டது. அதேசமயம், இலகு ரக வர்த்தக வாகன விற்பனை எண்ணிக்கை 2,641-லிருந்து 2% அதிகரித்து 2,696-ஆக இருந்தது என்று அசோக் லேலண்ட் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மூலக்கதை