டொயோட்டா கார் விற்பனை 15% உயர்வு

தினமணி  தினமணி

டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவன கார் விற்பனை சென்ற ஆகஸ்டில் 15 சதவீதம் அதிகரித்தது.

இதுகுறித்து அந்த நிறுவனத்தின் இயக்குநரும், மூத்த துணைத் தலைவருமான (விற்பனை & சந்தைப்படுத்துதல்) என். ராஜா கூறியதாவது: சென்ற ஆகஸ்ட் மாதத்தில் டொயோட்டா கார் விற்பனை எண்ணிக்கை 12,801-ஆக இருந்தது. கடந்த ஆண்டு இதே கால அளவில் விற்பனையான 11,161 கார்களுடன் ஒப்பிடுகையில் இது 15 சதவீதம் அதிகமாகும். இருப்பினும், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியான கார்களின் எண்ணிக்கை 1,386-லிருந்து 10.24 சதவீதம் குறைந்து 1,244-ஆக இருந்தது.

கடந்த மாதம் டொயோட்டா அறிமுகப்படுத்திய இன்னோவா கிறிஸ்டா பெட்ரோல் கார்களுக்கு சந்தையில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்றார் அவர்.

மூலக்கதை