தென்னைப் பொருள் ஏற்றுமதியில் இந்தியா முதலிடம்: மத்திய அமைச்சர் நம்பிக்கை
நல்ல விலை கிடைப்பதால் இனி வரும் ஆண்டுகளில் தென்னைப் பொருள்கள் ஏற்றுமதியில் இந்தியா முதலிடம் வகிக்கும் என மத்திய வேளாண் துறை அமைச்சர் ராதா மோகன் சிங் நம்பிக்கை தெரிவித்தார்.
உலக தேங்காய் தினத்தை முன்னிட்டு ஒடிசா மாநிலம் புவனேசுவரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் கூட்டத்தில் கலந்து கொண்ட அவர் இதுகுறித்து மேலும் கூறியதாவது:
உலக அளவில் தென்னைப் பொருள்கள் உற்பத்தியில் இந்தியா முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த 2015-16-ஆம் நிதி ஆண்டில் ரூ.2,044 கோடி மதிப்புக்கு தென்னைப் பொருள்கள் உற்பத்தி செய்யப்பட நிலையில் அதன் ஏற்றுமதி ரூ.1,450 கோடியாக இருந்தது.
2015-20-ஆம் ஆண்டுக்கான வெளியுறவு வர்த்தக கொள்கையில் தென்னைப் பொருள்கள் ஏற்றுமதிக்கு மத்திய அரசு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளது. குறிப்பாக, ஏற்றுமதி மதிப்பில் 5% வரை ஊக்கத் தொகை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கொப்பரைக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் தென்னைப் பொருள்கள் குறைவான விலையில் நிறைந்த தரத்துடன் இருப்பதால் வரும் ஆண்டுகளில் இதன் ஏற்றுமதி குறிப்பிடத்தக்க அளவுக்கு அதிகரிக்கும்.
கடந்த ஆண்டு வரை தேங்காய் எண்ணெய்யை இறக்குமதி செய்து வந்த நாம், நடப்பு நிதி ஆண்டிலிருந்து அதனை மலேசியா, இந்தோனேசியா மற்றும் இலங்கைக்கு ஏற்றுமதி செய்யத் தொடங்கியுள்ளோம். முதல் முறையாக தற்போதுதான் அதிக அளவிலான உலர்ந்த தேங்காய்களை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் ஆரம்பித்துள்ளோம். தேங்காய் உற்பத்தியில் மட்டுமன்றி, தென்னைப் பொருள் ஏற்றுமதி மற்றும் தேங்காய் பதப்படுத்துதலிலும் சர்வதேச அளவில் இந்தியா முதலிடம் வகிக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
நிகழ்ச்சியில், தென்னை வேளாண் சாகுபடியில் சிறப்பாகச் செயல்பாட்ட 14 விவசாயிகளுக்கு தேசிய விருதை வழங்கி மத்திய வேளாண் துறை அமைச்சர் ராதாமோகன் சிங் கௌரவித்தார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
