ஹீரோ மோட்டோகார்ப் வாகன விற்பனை 28% உயர்வு

தினமணி  தினமணி

உள்நாட்டில் இருசக்கர வாகன தயாரிப்பில் முன்னணியில் உள்ள ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் ஆகஸ்ட் மாத வாகன விற்பனை 28% உயர்ந்தது.

இதுகுறித்து அந்த நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளதாவது:

ஹீரோ மோட்டோகார்ப் சென்ற ஆகஸ்ட் மாதத்தில் 6,16,424 வாகனங்களை விற்பனை செய்தது. கடந்த ஆண்டின் இதே கால அளவில் விற்பனை செய்யப்பட்ட 4,80,537 வாகனங்களுடன் ஒப்பிடுகையில் இது 28% அதிகமாகும்.

நடப்பு நிதி ஆண்டில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தைகளில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் 15 புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்த உள்ளது.

அதன் ஒரு பகுதியாக, உள்நாட்டில் பண்டிகை காலத்துக்கு முன்பாக 150சிசி திறனுள்ள புதிய அச்சீவர், சூப்பர் ஸ்பிளெண்டர் மற்றும் ஐ3எஸ் தொழில்நுட்பத்தில் உருவான பேஷன் ப்ரோ ஆகிய மூன்று மோட்டார்சைக்கிள்கள் விரைவில் அறிமுகமாக உள்ளன என ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மூலக்கதை