இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸின் ஹிந்திப் படம் இன்று வெளியீடு!

தினமணி  தினமணி
இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸின் ஹிந்திப் படம் இன்று வெளியீடு!

சோனாக்‌ஷி சின்ஹா நடிப்பில் அகிரா என்கிற ஹிந்திப் படத்தை இயக்கியுள்ளார் ஏ.ஆர். முருகதாஸ். தமிழில் வெளியாகி கவனம் ஈர்த்த மௌன குரு படத்தின் ஹிந்தி ரீமேக் இது. தமிழில் உள்ளதுபோல் இல்லாமல் நாயகியை மையமாக வைத்து கதை மாற்றப்பட்டுள்ளது.

அகிரா இன்று வெளியாகியுள்ளது. இதனையொட்டி, முருகதாஸுக்கு பல திரையுலகப் பிரபலங்கள் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்கள்.

இதற்குப் பிறகு மகேஷ் பாபுவை கதாநாயகனாகக் கொண்டு தமிழ்-தெலுங்குப் படத்தை இயக்க உள்ளார் முருகதாஸ். அந்தப் படத்தில் வில்லன் வேடத்தில் எஸ்.ஜே. சூர்யா நடிக்கிறார்.

மூலக்கதை