ஜோஷ்வா ஸ்ரீதருக்கு ஏ.ஆர். ரஹ்மான் வாழ்த்து!

தினமணி  தினமணி
ஜோஷ்வா ஸ்ரீதருக்கு ஏ.ஆர். ரஹ்மான் வாழ்த்து!

நடிகர் நாசரின் மகன் லுத்ஃபுதீன், ஐஸ்வர்யா ராஜேஷ், சீன நடிகை நரேல் கெங் ஆகியோர் நடிக்கும் படம் ‘பறந்து செல்ல வா’. தனபால் பத்மநாபன் இப்படத்தை இயக்கியுள்ளார். இசை - ஜோஷ்வா ஸ்ரீதர். இது அவருடைய 25-வது படம்.

இதனையொட்டி, ஜோஷ்வா ஸ்ரீதருக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளார். ‘என் நண்பர் ஜோஷுவா ஸ்ரீதருக்கு உரிய வெற்றியும் அன்பும் கிடைக்க வாழ்த்துகிறேன். 'பறந்து செல்ல வா' குழுவில் இருக்கும் எல்லோருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.’ என்று தன் வாழ்த்துக் குறிப்பில் ரஹ்மான் கூறியுள்ளார்.

மூலக்கதை