மாருதி கார் விற்பனை 12% அதிகரிப்பு

தினமணி  தினமணி

நாட்டின் முன்னணி மோட்டார் வாகனத் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி இந்தியா நிறுவனத்தின் ஆகஸ்ட் மாத கார் விற்பனை 12.2 சதவீதம் அதிகரித்தது.

இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

சென்ற ஆகஸ்ட் மாதத்தில் மாருதி சுஸுகி நிறுவனம் 1,32,211 கார்களை விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டு இதே கால அளவில் விற்பனையான 1,17,864 கார்களுடன் ஒப்பிடும்போது இது 12.2 சதவீத வளர்ச்சியாகும்.

உள்நாட்டில் கார் விற்பனை 1,06,781 என்ற எண்ணிக்கையிலிருந்து 12.3 சதவீதம் அதிகரித்து 1,19,931-ஆக இருந்தது.

ஆல்டோ, வேகன்ஆர் உள்ளிட்ட குறைந்த விலைப் பிரிவு கார்களின் விற்பனை 5.8 சதவீதம் குறைந்து 35,490-ஆக இருந்தது. ஸ்விஃப்ட், எஸ்டிலோ, ரிட்ஸ், டிûஸயர், பலேனோ ஆகிய நடுத்தர வகை கார்கள் விற்பனை 9.9 சதவீதம் அதிகரித்து 45,579-ஆக காணப்பட்டது. மாருதி சுஸுகியின் இலகு ரக வர்த்தக வாகனமான சூப்பர் கேரியின் விற்பனை 25-ஆக இருந்தது. சென்ற ஆகஸ்டில் நிறுவனத்தின் கார்கள் ஏற்றுமதி 11,083 என்ற எண்ணிக்கையிலிருந்து 10.8 சதவீதம் அதிகரித்து 12,280-ஆக இருந்தது என மாருதி சுஸுகி இந்தியா அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மூலக்கதை