நான்கு கதாநாயகிகளுடன் நடிக்கும் அதர்வா!

தினமணி  தினமணி
நான்கு கதாநாயகிகளுடன் நடிக்கும் அதர்வா!

ரெஜினா, பிரனிதா, ஐஸ்வர்யா ராஜேஷ், ஆனந்தி...

இந்த 4 கதாநாயகிகளும் ஒரே படத்தில் நடிக்க உள்ளார்கள். கதாநாயகன் மட்டும் ஒருவர்தான். அதர்வா.

படத்தலைப்பு - ஜெமினிகணேசனும் சுருளிராஜனும். அம்மா கிரியேஷன்ஸ் தயாரிக்கும் படத்தை இயக்குபவர் ஓடம் இளவரசு. சூரி, மயில்சாமி, நான் கடவுள் ராஜேந்திரன் என ஒரு காமெடிப் பட்டாளமும் படத்தில் உண்டு.  

ஏற்கெனவே ஒரு பகுதி படப்பிடிப்பு முடிந்துவிட்டது. அடுத்ததாக ஊட்டியில் தொடர உள்ளது. ரெஜினா, பிரனிதா, ஆனந்தி ஆகியோர் ஆந்திராவிலும் அறிந்த முகங்கள் என்பதால் இந்தப் படம் தெலுங்கிலும் வெளிவரவுள்ளது.

மூலக்கதை