தனுஷ் தயாரிப்பில் மீண்டும் பா.இரஞ்சித் இயக்கத்தில் நடிக்கிறார் ரஜினி!

தினமணி  தினமணி
தனுஷ் தயாரிப்பில் மீண்டும் பா.இரஞ்சித் இயக்கத்தில் நடிக்கிறார் ரஜினி!

கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் ரஜினிகாந்த் நடித்த படம் கபாலி. பா. இரஞ்சித் இயக்கினார். இந்தப் படம் சமீபத்தில் வெளியானது.

இப்போது ரஜினி - பா. இரஞ்சித் கூட்டணி மீண்டும் இணைகிறது. இத்தகவலை நடிகர் தனுஷ் அறிவித்துள்ளார். தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் இப்படத்தைத் தயாரிக்கிறது. ஷங்கரின் 2.0 படத்துக்குப் பிறகு இது ஆரம்பிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து இப்படம் கபாலி -2-வாக இருக்குமோ என்கிற ஆவல் ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது. கபாலி படத்தை தாணு தயாரித்ததால் அவர் அனுமதி அளித்தால் மட்டுமே கபாலி என்கிற பெயரை வைத்து மற்றொரு படம் தயாரிக்கமுடியும். அல்லது ஒருவேளை இது புதிய கதை கொண்ட படமா என்றும் தெரியவில்லை. படம் குறித்த மேலதிகத் தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மூலக்கதை