இசைக் கலைஞர் திருவுடையான் மரணம்: மார்க்சிஸ்ட் இரங்கல்

தினமணி  தினமணி

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் -கலைஞர்கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளரும், இசைக் கலைஞருமான திருவுடையான் மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:

சேலத்திலிருந்து சொந்த ஊரான சங்கரன்கோவிலுக்கு காரில் ஞாயிற்றுக்கிழமை சென்று கொண்டிருந்தபோது லாரி மீது மோதி ஏற்பட்ட விபத்தில் சம்பவ இடத்திலேயே திருவுடையான் (48) உயிரிழந்தார்.

தமிழகம் முழுவதும் பல்வேறு மேடைகளில் தனது அற்புதமான குரல் வளத்தால் செங்கீதங்களைப் பாடி மக்களைக் கவர்ந்தவர் திருவுடையான். அவருடைய மறைவுச் செய்தி அதிர்ச்சியையும், வேதனையையும் அளித்திருக்கிறது. அவரது மறைவால் வாடும் அவருடைய குடும்பத்தினருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறது என்ற அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மூலக்கதை