கார்பரண்டம் யூனிவர்ஸல்: ஓசூரில் புதிய ஆராய்ச்சி மையம் தொடக்கம்

தினமணி  தினமணி
கார்பரண்டம் யூனிவர்ஸல்: ஓசூரில் புதிய ஆராய்ச்சி மையம் தொடக்கம்

முருகப்பா குழுமத்தின் ஓர் அங்கமான கார்பரண்டம் யூனிவர்ஸல் நிறுவனம் ஓசூரில் உள்ள அதன் செராமிக் ஆலையில் புதிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தை தொடங்கியுள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனத்தின் தலைவர் எம்.எம். முருகப்பன் கூறியதாவது:

மூலப் பொருள் அறிவியல் பிரிவில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தை தொடங்கியுள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது. இந்த மையம், மூலப் பொருள் பண்புகள், நுண்வடிமைப்புகளை ஆராயும் வகையிலான அதி நவீன உபகரணங்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், வாடிக்கையாளரின் தேவை அறிந்து குறைந்த விலை கொண்ட மிகச் சிறந்த தரமான பொருள்களை உற்பத்தி செய்து வழங்க முடியும்.

வரும் 2020-ஆம் ஆண்டுக்குள் அதிநவீன பீங்கான் தயாரிப்புகளை உருவாக்குவதில் நிறுவனத்தை உலக அளவில் முன்னணி இடத்துக்கு கொண்டு வர இலக்கு நிர்ணயித்துள்ளோம். அதற்கு, இந்த ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் மிகவும் உறுதுணையாக இருக்கும் என்று நம்புகிறோம்.

இந்த ஆராய்ச்சி மையம் மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி துறை சான்றிதழைப் பெற்றது என்றார் அவர்.

மூலக்கதை