ஒரு கோடி மரங்களை நட என்.டி.பி.சி. திட்டம்

தினமணி  தினமணி
ஒரு கோடி மரங்களை நட என்.டி.பி.சி. திட்டம்

பொதுத் துறை நிறுவனமான என்.டி.பி.சி. நடப்பு நிதி ஆண்டில் 1 கோடி மரங்களை நட திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

காடு வளர்ப்புத் திட்டத்தின் கீழ் என்.டி.பி.சி. நிறுவனம் நடப்பு நிதி ஆண்டில் 1 கோடி மரங்களை நட திட்டமிட்டுள்ளது. மத்திய பிரதேசம், பிகார், அஸ்ஸாம், கர்நாடகம், ஆந்திரம், தெலுங்கானா மற்றும் மஹாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் மரங்களை நட முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக, பிகார், அஸ்ஸாம், மத்திய பிரதேசம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களின் வனத் துறையிடம் என்.டி.பி.சி நிறுவனம் ஏற்கெனவே புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது.

எஞ்சியுள்ள மாநில வனத் துறையிடம் விரைவில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆகஸ்ட் 27-ஆம் தேதி கர்நாடக வனத்துறையிடம் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி பெங்களூருவில் மட்டும் 5,32,950 மரங்கள் நடப்பட உள்ளன என்று என்.டி.பி.சி. அந்த செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

 

மூலக்கதை