தேனா வங்கி: ரூ.1,100 கோடிக்கு கடன்பத்திரங்களை வெளியிட திட்டம்

தினமணி  தினமணி

பொதுத் துறையைச் சேர்ந்த தேனா வங்கி ரூ.1,100 கோடிக்கு கடன்பத்திரங்களை வெளியிட திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து அந்த வங்கி மேலும் கூறியுள்ளதாவது:

வரும் 2019-ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் பேஸல் 3 விதிமுறையை நிறைவேற்ற வேண்டிய கட்டாயத்தில் இந்திய வங்கிகள் உள்ளன. தேனா வங்கியும் மூலதனத்தை வலுப்படுத்திக் கொள்ளும் வகையில் கடன்பத்திரங்களை வெளியிட்டு நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது.

இதற்கான வரைவு திட்டம் வங்கியின் இயக்குநர்கள் குழுவின் அனுமதிக்காக வைக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஒன்று அல்லது பல கட்டங்களாக ரூ.1,100 கோடியை திரட்டிக் கொள்ளும் வகையில் அனுமதி கோரப்பட்டுள்ளது என்று தேனா வங்கி தெரிவித்துள்ளது.

 

மூலக்கதை