இலங்கைத் தமிழர்கள் குறித்து சேரன் பேசியது தேவையற்றது: விஷால்
சென்னையில் படவிழா ஒன்றில் பேசிய இயக்குநர் சேரன், தமிழகத்தில் திருட்டு டிவிடி அதிகரித்துள்ளது. இலங்கைத் தமிழர்கள் புதிய திரைப்படங்களை இணையதளங்களில் வெளியிடுவதை அறிந்து வேதனைப்படுகிறேன் என்று பேசினார். இதனையடுத்து அவருடைய பேச்சுக்குப் பரவலாகக் கண்டனங்கள் எழுந்தன.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக இயக்குநர் சேரன் அறிக்கை வெளியிட்டார். அதில் அவர் கூறியதாவது:
என்னைப்பற்றி தெரிந்தவர்களுக்கு நான் எதற்காக பேசினேன், யாரைப்பற்றி பேசியிருப்பேன் எனப் புரிந்திருக்கும்... என்னைத் தெரியாதவர்களுக்கு நான் என்ன விளக்கம் சொல்வது....? இதுவரை திரையுலகில் வெளிநாடுகளில் இருந்து திருட்டு டிவிடி வருகிறது. ஆன்லைனில் பதிவேற்றம் செய்கிறார்கள் என்று கதறியபோது இந்த விமரிசகர்கள் ஏன் ஒரு வார்த்தைகூட அவர்களையும் அவர்களது செயல்களையும் கண்டித்து அறிக்கை வெளியிடவில்லை.. அப்போது எங்களுடைய வாழ்க்கை பற்றி அவர்களுக்குக் கவலை இல்லையா?
உலகெங்கும் உள்ள நண்பர்களைக் கொண்டு (அவர்களும் இலங்கைத் தமிழர்கள்தான்) C2H நிறுவனக்கிளைகள் தொடங்க முயன்றபோது அவர்களைத் தடுத்தவர்கள், மிரட்டியவர்கள் இன்றும் திருட்டுத்தனமாக விற்பவர்கள்தான்... ஒட்டுமொத்த இலங்கைத் தமிழர்களை நான் சொல்லியிருக்கிறேன் என்பது தவறு... நல்ல குணமும் நேர்மையும் கொண்ட ஈழத்தமிழர்களுக்கும் போராளிகளுக்கும் என்னை நன்கு தெரியும்.. அவர்கள் யாரும் என்னை தவறாக நினைக்கமாட்டார்கள் என்று கூறினார்.
இந்த விவகாரம் குறித்து நடிகர் விஷால் ட்விட்டரில் கூறியதாவது: ஒருபட விழாவில் இலங்கைத் தமிழர்கள் குறித்து இயக்குநர் சேரன் பேசியிருப்பது தேவையற்றது. இலங்கைத் தமிழர்கள்மீது குற்றச்சாட்டுகளை வைப்பதைத் தவிர்ப்போம். அவர்கள் இப்போதாவது நிம்மதியாக வாழட்டும் என்றார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
