மதுரையில் குடியரசு தினத்தன்று விடுமுறை அளிக்காத 70 நிறுவனங்களுக்கு அபராதம்

நக்கீரன்  நக்கீரன்

பதிவு செய்த நாள் : 28, ஜனவரி 2016 (19:20 IST)

மாற்றம் செய்த நாள் :28, ஜனவரி 2016 (19:20 IST)

 மதுரையில் குடியரசு தினத்தன்று விடுமுறை அளிக்காத

 70 நிறுவனங்களுக்கு அபராதம்

மதுரை தொழிலாளர் இணை ஆணையர் சரவணன், துணை ஆணையர் ராதாகிருஷ்ண பாண்டியன் ஆகியோரது ஆலோசனையின்படி தொழிலாளர் ஆய்வாளர் சரோஜினிதேவி தலைமையில் அனைத்து தொழிலாளர் துணை ஆய்வர்கள் மற்றும் தொழிலாளர் உதவி ஆய்வர்களால் குடியரசு தினத்தன்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் சட்டத்தின்படி தேசிய பண்டிகை விடுமுறை தினமாகிய குடியரசு தினத்திற்கு கடைகள் மற்றும் நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட வேண்டும்.

விடுமுறை அளிக்கப்படாமல் ஊழியர்கள் வேலை செய்ய அனுமதிக்கப்பட்டால்,  வேண்டுமானால் அவர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் அல்லது வேறொரு நாளில் மாற்று விடுப்பு அளிக்கப்பட வேண்டும். அவ்வாறு அளிக்கப்பட வேண்டுமென்றால் ஊழியர்களின் கையொப்பம் பெற்று அதனை தேசிய பண்டிகை விடுமுறை தினத்திற்கு 24 மணி நேரத்திற்கு முன்னர் சம்பந்தப்பட்ட ஆய்வர்களிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

மேற்கண்டவாறு படிவம் அனுப்ப தவறிய 42 கடைகள் மற்றும் நிறுவனங்கள், 21 உணவு நிறுவனங்கள் மற்றும் 6 மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் மீது (மொத்தம் 69) வழக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.  இந்த வழக்குகளுக்கு அபராதம் வசூலிக்கப்படும். இரண்டாவது முறையாக காணப்படும் முரண்பாட்டிற்கு நீதிமன்ற நடவடிக்கை தொடரப்படும் என மதுரை மாவட்ட தொழிலாளர் ஆய்வர் சரோஜினிதேவி தெரிவித்துள்ளார்.

மூலக்கதை