சிவகங்கையில் கவுரவ விரிவுரையாளர்கள் போராட்டம் ( படங்கள் )

நக்கீரன்  நக்கீரன்

பதிவு செய்த நாள் : 28, ஜனவரி 2016 (19:14 IST)

மாற்றம் செய்த நாள் :28, ஜனவரி 2016 (19:14 IST)

சிவகங்கையில் 

கவுரவ விரிவுரையாளர்கள் போராட்டம் ( படங்கள் )

தமிழகம் முழுவதும் உள்ள அரசுக் கல்லூரிகளில் பணியாற்றி வரும் கவுரவ விரிவுரையாளர்கள்,

பல்கலைக்கழக மானியக் குழு UGC சிபாரிசு செய்துள்ள அடிப்படையில் மாதம் ரூபாய் 25000 ஊதியம் வழங்க வேண்டும், சிறப்பு ஆசிரியர் தேர்வு வாரியம் TRB மூலம் பணி நிரந்தரம் செய்திட வேண்டும் என்ற நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் செய்துள்ளனர்.

சிவகங்கை மன்னர் துரைச்சிங்கம் அரசு கலைக் கல்லூரியிலும், சிவகங்கை அரசு மகளிர் கல்லூரியிலும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள கவுரவ விரிவுரையாளர்களை சந்தித்து நகராட்சி தலைவர் எம். அர்ச்சுணன் வாழ்த்துக்களை தெரிவித்து பேராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார்.


செய்தி : பாலாஜி

மூலக்கதை