கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய வழக்கில் சல்மான் கான் கேவியெட் மனு தாக்கல்

NEWS 7 TAMIL  NEWS 7 TAMIL
கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய வழக்கில் சல்மான் கான் கேவியெட் மனு தாக்கல்

கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய வழக்கில் நடிகர் சல்மான் கான் உச்சநீதிமன்றத்தில் கேவியெட் மனு தாக்கல் செய்துள்ளார். 

கடந்த 2002 ஆம் ஆண்டு மும்பையின் பாந்ரா பகுதியில் பாலிவுட் நடிகர் சல்மான் கான் குடிபோதையில் காரை ஓட்டி நடைபாதையில் துாங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

வழக்கின் விசாரணை முடிவில் சல்மான்கானுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், 25,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. இதனை எதிர்த்து, மும்பை உயர்நீதிமன்றத்தில் சல்மான்கான் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் கடந்த டிசம்பர் 10 ஆம் தேதி அவரை விடுவிப்பதாக தீர்ப்பு வழங்கப்பட்டது. 

மும்பை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மஹாராஸ்டிரா அரசு, கடந்த 23 ஆம் தேதி மேல் முறையீடு செய்துள்ளது. இந்நிலையில் இந்த வழக்கில் உத்தரவு பிறப்பிக்கும் முன்னர் தம்மிடமும் கருத்து கேட்க வேண்டும் என கோரி உச்சநீதிமன்றத்தில் சல்மான் கான் இன்று கேவியட் மனுவினை தாக்கல் செய்துள்ளார்.

மூலக்கதை