சென்னை சட்டக்கல்லூரி மாணவர்கள் மோதல் வழக்கில் 21 பேருக்கு சிறை - 22 பேர் விடுவிப்பு
பதிவு செய்த நாள் : 28, ஜனவரி 2016 (17:30 IST)
மாற்றம் செய்த நாள் :28, ஜனவரி 2016 (17:30 IST)
சென்னை சட்டக்கல்லூரி மாணவர்கள் மோதல் வழக்கில்
21 பேருக்கு சிறை - 22 பேர் விடுவிப்பு
அம்பேத்கர் சட்டக்கல்லூரி வளாகத்தில் கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் 12ம் தேதி சுவரொட்டி ஒட்டுவது தொடர்பாக மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டது. ஆயுதங்களுடன் ஒருவரை யொருவர் கடுமையாக தாக்கியதால் கல்லூரி வளாகத்தில் பதட்டம் ஏற்பட்டது. மாநிலத்தையே உலுக்கிய இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் 43 பேரை கைது செய்தனர். இவர்கள் மீதான வழக்கு சென்னை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணை முடிவடைந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்ட 43 பேரில் 21 பேருக்கு தலா மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.
இந்த வழக்கில் இருந்து பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராஜ், வழக்கறிஞர் ரஜினிகாந்த் உள்ளிட்ட 22 பேர் விடுவிக்கப்பட்டனர்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
