சென்னை சட்டக்கல்லூரி மாணவர்கள் மோதல் வழக்கில் 21 பேருக்கு சிறை - 22 பேர் விடுவிப்பு

நக்கீரன்  நக்கீரன்

பதிவு செய்த நாள் : 28, ஜனவரி 2016 (17:30 IST)

மாற்றம் செய்த நாள் :28, ஜனவரி 2016 (17:30 IST)

 சென்னை சட்டக்கல்லூரி மாணவர்கள் மோதல் வழக்கில் 

21 பேருக்கு சிறை - 22 பேர் விடுவிப்பு

அம்பேத்கர் சட்டக்கல்லூரி வளாகத்தில் கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் 12ம் தேதி சுவரொட்டி ஒட்டுவது தொடர்பாக மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டது. ஆயுதங்களுடன் ஒருவரை யொருவர் கடுமையாக தாக்கியதால் கல்லூரி வளாகத்தில் பதட்டம் ஏற்பட்டது. மாநிலத்தையே உலுக்கிய இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் 43 பேரை கைது செய்தனர்.   இவர்கள் மீதான வழக்கு சென்னை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணை முடிவடைந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்ட 43 பேரில் 21 பேருக்கு தலா மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. 

இந்த வழக்கில் இருந்து பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராஜ், வழக்கறிஞர் ரஜினிகாந்த் உள்ளிட்ட 22 பேர் விடுவிக்கப்பட்டனர்.

மூலக்கதை