ஆனந்த விகடன் வார இதழ் மீது மேலும் 5 அமைச்சர்கள் அவதூறு வழக்கு

NEWS 7 TAMIL  NEWS 7 TAMIL
ஆனந்த விகடன் வார இதழ் மீது மேலும் 5 அமைச்சர்கள் அவதூறு வழக்கு

முதலமைச்சரை தொடர்ந்து ஆனந்த விகடன் வார இதழ் மீது மேலும் 5 அமைச்சர்கள் சார்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று அவதூறு வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.

அமைச்சர்கள் வைத்திலிங்கம், கே.சி.வீரமணி, எம்.எஸ்.எம். ஆனந்தன், எடப்பாடி பழனிச்சாமி, பழனியப்பன் ஆகியோர் சார்பில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், ஆனந்த விகடனில் மந்திரி தந்திரி பகுதியில் அமைச்சர்கள் பற்றி கூறியுள்ள தகவல்கள் உண்மைக்கு மாறானது என்று தெரிவித்துள்ளனர். 

தமிழக அரசுக்கு அவப் பெயரை உண்டாக்கும் விதமாக செய்தி வெளியிடப்பட்டுள்ளதாகவும், இந்த செய்தியை வெளியிட்ட ஆசிரியர் கண்ணன், பதிப்பாளர் மாதவன் ஆகியோரை அவதூறு சட்டத்தின் கீழ் தண்டிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

மூலக்கதை