திமுக தொகுதி என்பதால் இலவச பொருட்கள் கிடைக்காத நிலை; திருவட்டார் மக்கள் போராட்டம் ( படங்கள் )
பதிவு செய்த நாள் : 28, ஜனவரி 2016 (16:52 IST)
மாற்றம் செய்த நாள் :28, ஜனவரி 2016 (16:52 IST)
திமுக தொகுதி என்பதால்
இலவச பொருட்கள் கிடைக்காத நிலை;
திருவட்டார் மக்கள் போராட்டம்
குமரி மாவட்டம் திருவட்டார் பேரூராட்சியில் இன்று அரசு இலவச பொருட்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதை நம்பி காலையில் இருந்தே மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். மாலை வரை எதிர்பார்த்தும் இலவச பொருட்கள் வழங்கப்படாததால், ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதோடு, அதில் சிலர் அருகில் இருந்த குடிநீர் தொட்டி மீது ஏறி நின்று அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். இதைத்தொடர்ந்து அங்கு வந்த பத்மநாதன் தொகுதி திமுக எம்.எல்.ஏ. புஷபலீலா ஆல்பன் தண்ணீர் தொட்டி மீது ஏறி நின்றவர்களிடம், பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையில் அந்த மக்கள், இலவச பொருட்கள் எப்போது கிடைக்கும்? என்று கேட்டனர். அதற்கு அவர், இது திமுக பேராட்சி என்பதால், அரசு இந்த பகுதியை புறக்கணிக்கிறது. அதிகாரிகளை சந்தித்து நடவடிக்கை எடுக்கிறேன் என்று கூறியதால் மக்கள் களைந்து சென்றனர்.
- மணிகண்டன்




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
