சென்னை: போராட்டம் நடத்திய மாணவர் அமைப்பினர் - போலீசார் இடையே மோதல் (படங்கள்)

நக்கீரன்  நக்கீரன்
சென்னை: போராட்டம் நடத்திய மாணவர் அமைப்பினர்  போலீசார் இடையே மோதல் (படங்கள்)

பதிவு செய்த நாள் : 28, ஜனவரி 2016 (15:55 IST)

மாற்றம் செய்த நாள் :28, ஜனவரி 2016 (16:1 IST)

சென்னை: போராட்டம் நடத்திய மாணவர் அமைப்பினர் - போலீசார் இடையே மோதல் 


எஸ்.வி.எஸ். இயற்கை மருத்துவக் கல்லூரிக்கு முறைகேடாக அனுமதி அளித்தாக குற்றம் சாட்டி, சென்னையில் உள்ள எம்ஜிஆர் பல்கலைக்கழகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய மாணவர் அமைப்பினருக்கும், போலீசாருக்கும் மோதல் ஏற்பட்டது.  

எஸ்.வி.எஸ். இயற்கை மருத்துவக் கல்லூரி மாணவிகள் 3 பேர் உயிரிழந்த விவகாரத்தில் பல்வேறு மாணவர் அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் இன்று (வியாழன்) சென்னையில் உள்ள எம்ஜிஆர் பல்கலைக்கழகத்தை இந்திய மாணவர் சங்கத்தைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்டவர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசாரின் தடுப்புகளை மீறி மாணவர்கள் செல்ல முயன்றனர். அவர்களை தடுத்து நிறுத்தி போலீசார் கைது செய்தனர். அப்போது மாணவர்கள் போலீசார் இடையே மோதல் உருவானது. மாணவர்களை போலீசார் பேருந்தில் ஏற்றி சென்றனர். இதனால் அப்பகுதி சிறிது நேரம் பதட்டமாக காணப்பட்டது. 

படங்கள்: வினோத்

மூலக்கதை