முதல் 20 'ஸ்மார்ட் சிட்டி' பட்டியல் வெளியீடு: சென்னை, கோவை இடம் பிடித்தன

NEWS 7 TAMIL  NEWS 7 TAMIL
முதல் 20 ஸ்மார்ட் சிட்டி பட்டியல் வெளியீடு: சென்னை, கோவை இடம் பிடித்தன

சென்னை, கோவை உட்பட நாடு முழுவதும் இருந்து 20 நகரங்கள் ஸ்மார்ட் சிட்டி பட்டியலில் முதல் கட்டமாக இடம்பெற்றுள்ளன. 

இந்த நகரங்களுக்காக 48,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். மத்திய அரசு வெளியிட்ட இந்த பட்டியலில், டெல்லி, சென்னை, கோவை, புவனேஸ்வர், ஜெய்ப்பூர், புனே, சூரத் உள்ளிட்ட நகரங்கள் இடம்பெற்றுள்ளன. 

மேலும், காக்கிநாடா, பெல்காம், போபால், கொச்சி, சூரத், அகமதாபாத், ஜபல்பூர், லூதியானா, விசாகப்பட்டினம், சோலாபூர், ஆகிய நகரங்களும் இந்த முதற்கட்டப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இந்த பட்டியலில் 5 மாநிலங்களின் தலைநகரங்களும் இடம் பெற்றுள்ளன. 

அடுத்த 5 ஆண்டுகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த 20 நகரங்களிலும் அனைத்து மேம்பாட்டுப் பணிகள் முடிவடையும் என வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். முதல்கட்டமாக தேர்வு செய்யப்பட்டுள்ள இந்த 20 நகங்களில் மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள 48,000 கோடி ரூபாய் மத்திய அரசு ஒதுக்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.

மூலக்கதை