பாஜக நகர்மன்ற தலைவரை கண்டித்து தேமுதிக போராட்டம்

நக்கீரன்  நக்கீரன்

பதிவு செய்த நாள் : 28, ஜனவரி 2016 (14:49 IST)

மாற்றம் செய்த நாள் :28, ஜனவரி 2016 (14:49 IST)

பாஜக நகர்மன்ற தலைவரை கண்டித்து தேமுதிக போராட்டம்

நாகர்கோவில் நகர்மன்ற தலைவராக இருப்பவர் பாஜகவைச் சேர்ந்த மீனாதேவ். நாகர்கோவில் நகரில் கடந்த நான்கரை ஆண்டுகளாக செயலற்று கிடக்கும் நகார்கோவில் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், நகர் மன்ற தலைவர் மீனாதேவ்வை கண்டித்தும் தேமுதிக குமரி கிழக்கு மாவட்ட சார்பில் மீனாட்சி புரம் அண்ணா பேருந்து நிலையம் எதிரே மறியல் போராட்டம் நடந்தது. 

இப்போராட்டத்திற்கு தேமுதிக கிழக்கு மாவட்ட தலைவர் ஜகநாதன் தலைமை தாங்கினார். போராட்டத்தில் ஈடுபட்ட 50 பேர் கைது செய்யப்பட்டனர். பராமரிக்கப்படாமல் இருக்கும் சாலைகளை உடனடியாக சீர் செய்ய வேண்டும். பாதாள சாக்கடை பணிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். இல்லை என்றால் நகராட்சியின் 51 வார்டு பகுதிகளிலும் தொடர் மறியல் நடத்தப்படும் என்று கூறினார். 

மணிகண்டன்

மூலக்கதை