கேரள முதல்வர் உம்மன்சாண்டி மீது வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு
சூரிய மின் தகடு ஊழல் வழக்கில் கேரள முதலமைச்சர் உம்மன் சாண்டிக்கு எதிராக வழக்குப் பதிவு செய்ய திருச்சூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கில் தொடர்புடையதாக கூறப்படும் மின்சாரத்துறை அமைச்சர் ஆர்யாடன் முகமது மீதும் வழக்குத்தொடர நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. கேரளாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திவரும் சூரிய மின் தகடு ஊழல் வழக்கில் முதலமைச்சர் உம்மன் சாண்டிக்கு 2 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்ததாக, முக்கிய குற்றவாளியான நடிகை சரிதா நாயர் நேற்று கூறியிருந்தார்.
சூரிய மின் தகடு ஊழல் வழக்கை விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள நீதிபதி சிவராஜன் தலைமையிலான ஆணையத்தின் முன் நேற்று ஆஜரான சரிதா நாயர், மின்சாரத்துறை அமைச்சர் ஆர்யாடன் முகமதுவுக்கு 40 லட்ச ரூபாய் லஞ்சம் கொடுத்தாகவும் தெரிவித்திருந்தார்.
உம்மன் சாண்டியின் உதவியாளர் தாமஸ் குருவில்லாவிடம் டெல்லி விஞ்ஞான் பவனில் ஒரு கோடியே 10 லட்ச ரூபாய் கொடுத்ததாகவும், அதனைத் தொடர்ந்து திருவனந்தபுரத்தில் 80 லட்ச ரூபாய் கொடுத்ததாகவும் நீதிபதி சிவராஜனிடம் சரிதா நாயர் வாக்குமூலம் அளித்தார்.
இதனை தொடர்ந்து உம்மன் சாண்டி மீது வழக்கு பதிவு செய்ய கேரள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதனிடையே ஊழல் புகாரில் சிக்கியுள்ள முதலமைச்சர் உம்மன் சாண்டியை பதவி விலகக்கோரி கேரளாவில் போராட்டங்கள் வெடித்துள்ளன. திருவனந்தபுரத்தில் உம்மன் சாண்டிக்கு எதிராக போராட்டம் நடத்திய இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரை,
கண்ணீர் புகை குண்டுகளை வீசி காவல்துறையினர் கலைத்தனர்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
