ரஜினிக்கு விருது வழங்கியதில் அரசியல் உள்நோக்கம் எதுவும் இல்லை: மத்திய அமைச்சர் பேட்டி

நக்கீரன்  நக்கீரன்

பதிவு செய்த நாள் : 28, ஜனவரி 2016 (14:18 IST)

மாற்றம் செய்த நாள் :28, ஜனவரி 2016 (14:18 IST)

ரஜினிக்கு விருது வழங்கியதில் அரசியல் உள்நோக்கம் எதுவும் இல்லை: மத்திய அமைச்சர் பேட்டி

சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் ஆகியோர் இன்று கோவை வந்தனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பிரகாஷ் ஜவடேகர், வருகின்ற 2ம் தேதி பிரதமர் மோடி கோவை வரவுள்ளார். அதற்கான பணிகளை பார்வையிட வந்தேன். மத்திய அரசு தாக்கல் செய்யவுள்ள நிதிநிலை அறிக்கை தொடர்பாக கோவையில் நாளை தொழில் துறையினர் மற்றும் விவசாய அமைப்பினரை சந்தித்து பேச உள்ளோம். 

தூத்துக்குடி கடல் பகுதியில் திமிலங்கள் கரை ஒதுங்கியது குறித்து சென்னையில் உள்ள கடல்சார் ஆய்வு மையம் இரண்டு குழுக்கள் அமைத்து ஆய்வு மேற்கொண்டு வருகிறது. திமிலங்கள் கரை ஒதுங்குவது உலகம் முழுவதும் பல கடல் எல்லைகளில் நடந்து வருகிறது.

நடிகர் ரஜினிகாந்திற்கு பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது அவரது நடிப்பிற்கான அங்கீகாரம் எனவும்,  அதில் அரசியல் உள்நோக்கம் எதுவும் இல்லை. ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க உச்சநீதிமன்றம் இடைக்கால தடை மட்டுமே விதித்துள்ளதாகவும், இத்தடையை நீக்க மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தமது வாதத்தை அழுத்தம் திருத்தமாக முன்வைக்கும் என தெரிவித்தார். 

அருள்

மூலக்கதை