மக்கள் நலக் கூட்டணியில் இருப்பது சாதகமா? பாதகமா? இ.கம்யூனிஸ்ட் கட்சி ஆலோசனை

நக்கீரன்  நக்கீரன்

பதிவு செய்த நாள் : 28, ஜனவரி 2016 (13:57 IST)

மாற்றம் செய்த நாள் :28, ஜனவரி 2016 (13:57 IST)

மக்கள் நலக் கூட்டணியில் இருப்பது சாதகமா? பாதகமா? இ.கம்யூனிஸ்ட் கட்சி ஆலோசனை

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக் குழுக் கூட்டம் அக்கட்சியின் தலைமை அலுவலகமான பாலன் இல்லத்தில் இன்று (வியாழன்) காலை தொடங்கியது. கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சுதாகர் ரெட்டி தலைமையில் நடைபெற்ற கூட்த்தில், தேசிய செயலாளர் டி.ராஜா, மாநில செயலாளர் முத்தரசன், மூத்த தலைவர் நல்லக்கண்ணு, தேசிய குழு உறுப்பினர் தா.பாண்டியன், சி.மகேந்திரன் உள்பட 37 பேர் கலந்து கொண்டனர்.

இதில், வரும் சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியில் தொடர்ந்து நீடிப்பது, அதன் சாதக பாதகங்கள், கட்சி போட்டியிடும் தொகுதிகள், தேர்தல் செலவுகளுக்கு மக்களிடம் வசூல் செய்வது உள்ளிட்ட பல்வேறு விசயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து 29, 30 ஆகிய தேதிகளில் கட்சி மாநிலக் குழு கூட்டம் நடைபெற உள்ளது என்றார். 

ஜீவா தங்கவேல்

மூலக்கதை