மோசடி ஈமு நிறுவனங்களின் தளவாட பொருட்கள் ஏலம் விடுவதாக அறிவிப்பு

நக்கீரன்  நக்கீரன்

பதிவு செய்த நாள் : 28, ஜனவரி 2016 (13:35 IST)

மாற்றம் செய்த நாள் :28, ஜனவரி 2016 (13:35 IST)

மோசடி ஈமு நிறுவனங்களின் தளவாட பொருட்கள் ஏலம் விடுவதாக அறிவிப்பு

ஈரோடு மாவட்டத்தில் செயல்பட்டு வந்த மோசடி ஈமு நிறுவனங்களில் தளவாட பொருட்கள் பிப்ரவரி 11ஆம் தேதி ஏலம் விடுவதாக ஈரோடு மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. 

சில வருடங்களுக்கு முன்பு ஈரோடு மாவட்டத்தை மையப்படுத்தி பல்வேறு ஈமு நிறுவனங்கள் தோன்றின. மக்களிடம் அதிக ஆசையை காட்டி ஒரு லட்சம் ரூபாய் டெபாசிட் செய்தால் மாதம் ஆறாயிரம் ரூபாய் வருமானம் வரும் எனக் கூறி பல்லாயிரக்கணக்கானோரிடம் பல கோடி ருபாயை இந்த நிறுவனங்கள் வசூல் செய்தது. பிறகு முறைகேடு புகாரில் சிக்கி அனைத்து நிறுவனங்களும் முடக்கப்பட்டது. 

இந்த நிறுவனங்களில் விலை மதிப்பு கொண்ட கார்கள், பைக்குகள், லாரி உள்பட நான்கு சக்கர வாகனங்கள், கம்ப்யூட்டர், டிவி உள்பட ஏராளமான பொருட்கள் கைப்பற்றப்பட்டது. இவற்றை கோர்ட் உத்தரவின்படி ஏலம் விட ஈரோடு மாவட்ட நிர்வாகம் முடிவு செய்து அறிவித்துள்ளது. 

ஜீவா தங்கவேல்

மூலக்கதை