ஈரோடு கிழக்கில் மீண்டும் வெற்றி பெறுவேன்: சந்திரகுமார் பேச்சு

நக்கீரன்  நக்கீரன்

பதிவு செய்த நாள் : 28, ஜனவரி 2016 (13:21 IST)

மாற்றம் செய்த நாள் :28, ஜனவரி 2016 (13:21 IST)

ஈரோடு கிழக்கில் மீண்டும் வெற்றி பெறுவேன்: சந்திரகுமார் பேச்சு

தேமுதிக சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடாவும், ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவுமான சந்திரகுமார் தனது தொகுதி நிதியில் கட்டப்பட்ட வகுப்பறைகள், கழிப்பிடங்கள் போன்றவற்றை புதன்கிழமை மாலை திறந்து வைத்தார். 

அப்போது அவர் பேசும்போது, என்னுடைய தொகுதி நிதியில் இருந்து இதுவரை ஒன்பரை கோடி ரூபாய் அளவுக்கு வளர்ச்சி பணிகள் நடந்துள்ளது. தொகுதி நிதி சம்மந்தமாக மாவட்ட நிர்வாகத்தை அணுகினால் அதிகாரிகள் முறையாக பதில் கூறுவதில்லை. எனக்கு பெயர் வந்துவிடக் கூடாது என்று தவிர்க்கிறார்கள். ஆனாலும் தொகுதி மக்களுக்காக முழுமையாக செயல்பட்டு வருகிறேன். கட்சித் தலைமை மீண்டும் எனக்கு இந்த தொகுதியில் வாய்ப்பு கொடுத்தால் நான் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெறுவேன் என கூறினார்,

ஜீவா தங்கவேல்

மூலக்கதை