வங்கி கிளை மேலாளர்களுடன் போலீசார் ஆலோசனை

நக்கீரன்  நக்கீரன்
வங்கி கிளை மேலாளர்களுடன் போலீசார் ஆலோசனை

பதிவு செய்த நாள் : 28, ஜனவரி 2016 (13:6 IST)

மாற்றம் செய்த நாள் :28, ஜனவரி 2016 (13:9 IST)

வங்கி கிளை மேலாளர்களுடன் போலீசார் ஆலோசனை


இராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டினத்தில் ஏ.டி.எம் மெசினை உடைத்து கொள்ளை முயற்சி நடைபெற்றது. கொள்ளையர்கள் மெசினை உடைக்க முடியாததால் பல லட்சம் தப்பியது.

இதனை அடுத்து கீழக்கரை டி.எஸ்.பி. மகேஷ்வரி உத்தரவின் பேரில் அனைத்து வங்கி மேலாளர்களையும் அழைத்து ஆலோசனை மேற்கொண்டார். ஏ.டி.எம் வைத்திருக்கும் இடத்தில் காவாலாளிகளை நியமிப்பது, அபாய ஒலி எழுப்பும் கருவி வைப்பது ஆகியவை சம்பந்தமாக கிளை மேலாளர்களுக்கு தெரியப்படுத்தி இதை உங்க வங்கி உயர் அதிகாரிகளிடம் தெரிவிக்கும்படி வங்கி மேலாளருக்கு அறிவுறுத்தினார். 

இதில் ஏர்வாடி இன்ஸ்பெக்டர் பால்பாண்டி, கீழக்கரை இன்ஸ்பெகடர் ஆனந்த், எஸ்.ஐ. சிவசுப்பிரமணியன்,உளவுத்துறை எஸ்.ஐ.ஜேம்ஸ் மற்றும் காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

செய்தி: பாலாஜி

மூலக்கதை