​அதிமுக ஆட்சி நிர்வாகத்தால் இளைஞர்கள் பாதிப்பு: ஸ்டாலின் குற்றச்சாட்டு

NEWS 7 TAMIL  NEWS 7 TAMIL
​அதிமுக ஆட்சி நிர்வாகத்தால் இளைஞர்கள் பாதிப்பு: ஸ்டாலின் குற்றச்சாட்டு

அதிமுக ஆட்சி நிர்வாகம் செயலற்றுக் கிடப்பதாகவும், இதன் காரணமாகவே பல்லாயிரக் கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை என்றும் திமுக பொருளாளர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

நமக்கு நாமே விடியல் மீட்புப் பயணத்தின் இறுதிக்கட்டமாக, சென்னை நுங்கம்பாக்கத்தில், வேலையில்லா பட்டதாரி இளைஞர்களுடன் திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் இன்று கலந்துரையாடினார். அப்போது வேலை வாய்ப்பு அலுவலகங்கள் முறையாக செயல்படவில்லை என்று இளைஞர்கள் ஸ்டாலினிடம் புகார் தெரிவித்தனர். 

மேலும் பொறியியல் பட்டதாரிகளுக்கு, படிப்புக்கு ஏற்ற வேலை கிடைப்பதில்லை என்றும் சிறு தொழில் தொடங்க விரும்பும் இளைஞர்களுக்கு அரசிடம் ஆதரவு இல்லை என்றும், பட்டதாரி ஆசிரியர்களுக்கும் முறையான வேலை கிடைக்கவில்லை என்றும் இளைஞர்கள் குற்றம்சாட்டினர். வேலையில்லா பட்டதாரிகளுக்கான நல வாரியம் அமைக்க வேண்டும் இளைஞர்கள் கோரிக்கை விடுத்தனர். 

இதற்கு பதிலளித்த திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின், தமிழக அரசு செயலற்று முடங்கிக் கிடப்பதாகக் குற்றம் சாட்டினார். 

மூலக்கதை