​பழ.கருப்பையா நீக்கம்: ராமதாஸ் விமர்சனம்

NEWS 7 TAMIL  NEWS 7 TAMIL
​பழ.கருப்பையா நீக்கம்: ராமதாஸ் விமர்சனம்

அதிமுகவிலிருந்து பழ.கருப்பையா நீக்கப்பட்டது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக டிவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், பழ.கருப்பையாவை ஜெயலலிதா நீக்கியது எப்போதோ நடக்க வேண்டியது என்றும், முதுகு வளையாததால் ஒடிக்கப்பட்டிருக்கிறார் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், அடிமைகள் திமுகவில் முதுகெலும்புடன் இருந்தால் இது தான் பரிசு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பழ.கருப்பையாவை நீக்கினார் ஜெயலலிதா: எப்போதோ நடக்க வேண்டியது... இப்போது நடந்திருக்கிறது. முதுகு வளையாததால் ஒடிக்கப்பட்டிருக்கிறார்!

— Dr S RAMADOSS (@drramadoss) January 28, 2016

அதிமுகவிலிருந்து பழ.கருப்பையா நீக்கம்: அடிமைகள் திமுகவில் முதுகெலும்புடன் இருந்தால் இது தான் பரிசு!

— Dr S RAMADOSS (@drramadoss) January 28, 2016

மூலக்கதை