சூரிய மின் தகடு ஊழல்: உம்மன் சாண்டிக்கு ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்ததாக நடிகை சரிதா நாயர் தகவல்

NEWS 7 TAMIL  NEWS 7 TAMIL
சூரிய மின் தகடு ஊழல்: உம்மன் சாண்டிக்கு ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்ததாக நடிகை சரிதா நாயர் தகவல்

கேரளாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வரும் சூரிய மின் தகடு ஊழல் வழக்கில் முதலமைச்சர் உம்மன் சாண்டிக்கு 2 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்ததாக, முக்கிய குற்றவாளியான நடிகை சரிதா நாயர் கூறியுள்ளார். 

சூரிய மின் தகடு ஊழல் வழக்கை விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள நீதிபதி சிவராஜன் தலைமையிலான ஆணையத்தின் முன் நேற்று ஆஜரான சரிதா நாயர், இவ்வாறு கூறினார். மேலும் கேரள மாநில மின்சாரத்துறை அமைச்சர் ஆர்யாடன் முகமதுவுக்கு 40 லட்ச ரூபாய் லஞ்சம் கொடுத்தாகவும் சரிதா நாயர் தெரிவித்துள்ளார். 

உம்மன் சாண்டியின் உதவியாளர் தாமஸ் குருவில்லாவிடம் டெல்லி விஞ்ஞான் பவனில் ஒரு கோடியே 10 லட்ச ரூபாய் கொடுத்ததாகவும், அதனைத் தொடர்ந்து திருவனந்தபுரத்தில் 80 லட்ச ரூபாய் கொடுத்ததாகவும் நீதிபதி சிவராஜனிடம் சரிதா நாயர் வாக்குமூலம் அளித்தார். 

ஆனால், சரிதா நாயரின் குற்றச்சாட்டுகளை முதல்வர் உம்மன் சாண்டியும், அமைச்சர் ஆர்யாடன் முகமதுவும் மறுத்துள்ளனர். எனினும், லஞ்சக் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியிருக்கும் முதல்வர் உம்மன் சாண்டி பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் போர்க் கொடி உயர்த்தியுள்ளனர்.

மூலக்கதை