1ம் வகுப்பு மாணவனை கல்லால் அடித்துக் கொன்ற 6ம் வகுப்பு மாணவன்: திருப்பூரில் அதிர்ச்சி சம்பவம்
பதிவு செய்த நாள் : 28, ஜனவரி 2016 (9:9 IST)
மாற்றம் செய்த நாள் :28, ஜனவரி 2016 (9:10 IST)
1ம் வகுப்பு மாணவனை கல்லால் அடித்துக் கொன்ற 6ம் வகுப்பு மாணவன்: திருப்பூரில் அதிர்ச்சி சம்பவம்
திருப்பூர் அருகே தனியார் பள்ளி ஒன்றில் 1ம் வகுப்பு மாணவனை 6ம் வகுப்பு மாணவன் கல்லால் அடித்துக் கொன்ற சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பாரப்பாளையம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் வகுப்பு தொடங்கும் முன்பு ஒன்றாம் வகுப்பு மாணவனை தனியாக அழைத்துச் சென்ற 6ம் வகுப்பு மாணவன், கல்லால் தாக்கியுள்ளான். இதனை கவனித்த சக மாணவர்கள், ஆசிரியர்களிடம் இதனை தெரிவித்துள்ளனர். இதையடுத்து கழிவறைக்குள் சென்று பார்த்த ஆசிரியர்கள் தலையில் ரத்த காயத்துடன் மயங்கி கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
உடனடியாக மாணவனை மருத்துவமணைக்கு கொண்டு சென்றனர். மாணவனை பரிசோதித்த மருத்துவர்கள், மாணவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து போலீசார் மாணவனின் உடலை பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர். 6ம் வகுப்பு மாணவனை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர். அவனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறார் சீர்திருத்தப்பள்ளில் அடைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
