மாற்றுத்திறனாளி பெண் பலாத்காரம்: கூலித் தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை: நாமக்கல் கோர்ட்

நக்கீரன்  நக்கீரன்

பதிவு செய்த நாள் : 28, ஜனவரி 2016 (8:58 IST)

மாற்றம் செய்த நாள் :28, ஜனவரி 2016 (8:58 IST)

மாற்றுத்திறனாளி பெண் பலாத்காரம்: கூலித் தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை: நாமக்கல் கோர்ட்

நாமக்கல் மாவட்டம், கொண்டிசெட்டிப்பட்டியை சேர்ந்த கூலித் தொழிலாளி தங்கவேல்(வயது-65). இவரது பக்கத்து வீட்டில் இருந்த வாய் பேசமுடியாத, 17-வயதான மாற்றுத்திறனாளி பெண்ணை கடந்த, 2013-ம் ஆண்டு அக் 18-ஆம் தேதி, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தங்கவேல் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த நாமக்கல் மகளீர் காவல்நிலைய ஆய்வாளர் தங்கவேலை கைதுசெய்தார். இந்த வழக்கு நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடந்தது.

விசாரணை முடிவுயில், புதன்கிழமை தீர்ப்பு வழங்கிய நீதிபதி இராமதிலகம் குற்றவாளி தங்கவேலுக்கு, 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 15 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

சிவசுப்பிரமணியன்

மூலக்கதை