​பாஜக ஆட்சிமன்ற குழு இன்று கூடுகிறது: கூட்டணி குறித்து ஆலோசனை

NEWS 7 TAMIL  NEWS 7 TAMIL
​பாஜக ஆட்சிமன்ற குழு இன்று கூடுகிறது: கூட்டணி குறித்து ஆலோசனை

பாஜக ஆட்சிமன்றக் குழு கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது. சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் கூட்டணி அமைப்பது தொடர்பாக இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. 

பாஜகவில் முடிவெடுக்கும் அதிகாரம் கொண்ட அமைப்புகளில் முதன்மையானதாகக் கருதப்படும் ஆட்சிமன்றக் குழு கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற உள்ளது. பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித்ஷா மற்றும் அக்கட்சியின் மூத்த தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள உள்ளனர். 

பாஜக தலைவராக அமித்ஷா இரண்டாவது முறையாக கடந்த ஞாயிற்றுக்கிழமை தேர்ந்தெடுக்கப்பட்டார். அதற்கு இன்றைய ஆட்சிமன்றக் குழு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட உள்ளது. அத்துடன் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்தும் அதற்கான கூட்டணி வியூகங்கள் குறித்தும் பாஜக ஆட்சிமன்றக் குழு கூட்டத்தில் விவாதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மூலக்கதை