​சுவிட்சர்லாந்தின் பனிமலைப் பகுதியில் நடைபெற்றுவரும் சர்வதேச பலூன் திருவிழா

NEWS 7 TAMIL  NEWS 7 TAMIL
​சுவிட்சர்லாந்தின் பனிமலைப் பகுதியில் நடைபெற்றுவரும் சர்வதேச பலூன் திருவிழா

சுவிட்சர்லாந்தில் CHATEAU D'OEX பனிமலைப் பகுதியில் 38வது சர்வதேச பலூன் திருவிழா நடைபெற்று வருகிறது. வெப்பக்காற்று நிரப்பப்பட்ட பிரம்மாண்ட பலூன்களை வடிவமைக்க, 15 நாடுகளில் இருந்து ஏராளமானோர் வந்துள்ளனர். 

பல்வேறு நாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக கண்ணைக் கவரும் நிறங்களில், பிரம்மாண்ட பலூன்கள் வானில் பறக்கவிடப்பட்டன. இதனை சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர். 

பிரம்மாண்ட பலூன்களில் பயணித்தபடி பனிமலையின் இயற்கை அழகை பார்வையிடுவது புதிய அனுபவத்தை ஏற்படுத்துவதாகவும் சுற்றுலாப் பயணிகள் தெரிவித்தனர். கடந்த 23ம் தேதி தொடங்கிய இந்த பலூன் திருவிழா, வரும் 31ம் தேதி வரை நடைபெறுகிறது.

மூலக்கதை