​சர்ச்சைக்குரிய தென்சீனக் கடல் தீவுக்கு பயணம் மேற்கொள்ளும் தைவான் அதிபர்

NEWS 7 TAMIL  NEWS 7 TAMIL
​சர்ச்சைக்குரிய தென்சீனக் கடல் தீவுக்கு பயணம் மேற்கொள்ளும் தைவான் அதிபர்

சர்ச்சைக்குரிய தென் சீனக்கடற்பிரதேசத்திற்கு தைவான் அதிபர் Ma Ying-jeou பயணம் மேற்கொள்வதை அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.

சீனாவின் தென்கிழக்கு கடற்பகுதியில் உள்ள பல தீவுகளை ஜப்பான், பிலிப்பைன்ஸ், வியட்னாம், தைவான் உள்ளிட்ட நாடுகள் உரிமைகோரி வருகின்றன. இந்நிலையில், தைவானை தன்னுடன் இணைத்துக்கொள்ளும் முடிவில் இருக்கும் சீனா, அதற்காக ஆயுதங்களைப் பயன்படுத்தவும் தயார் நிலையில் உள்ளது. 

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த அதிபர் தேர்தலில் முதல் பெண் அதிபராக Tsai Ing-wen தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவர் இன்னும் சில வாரங்களில் பதவியேற்கவுள்ளார். 

இந்நிலையில், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக தென்சீனக் கடற்பகுதியில் உள்ள தீவுக்கு, தைவானின் தற்போதைய அதிபர் மா பயணம் மேற்கொள்ளவிருப்பதை அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது. மாவின் இந்தப் பயணம் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

மூலக்கதை