​சிங்கப்பூர் பூங்காக்களில் குரங்குகளுக்கு குவியும் பரிசுப் பொருட்கள்

NEWS 7 TAMIL  NEWS 7 TAMIL
​சிங்கப்பூர் பூங்காக்களில் குரங்குகளுக்கு குவியும் பரிசுப் பொருட்கள்

குரங்கு ஆண்டு பிறப்பதையொட்டி, சிங்கப்பூர் பூங்காக்களில் உள்ள குரங்குகளுக்கு ஏராளமான பரிசுப் பொருட்கள் குவிந்துவருகின்றன.

அடுத்த மாதம் எட்டாம் தேதியிலிருந்து சீனா, தென்கொரியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் குரங்கு ஆண்டு பிறக்கிறது. இதையடுத்து, சிங்கப்பூரில் உள்ள விலங்கியல் பூங்காவுக்கு வரும் பயணிகள் ஏராளமான தின்பண்டங்களை குரங்குகளுக்குப் பரிசாக அளிக்கின்றனர். 

சிறிய பைகளில் பழங்கள் மற்றும் குரங்குகளுக்குப் பிடித்தமான உணவுப்பொருட்கள் வைத்து மரக்கிளைகளில் மாட்டிவைக்கப்படுகின்றன. அவற்றை குரங்குகள் ஆர்வத்துடன் எடுத்துச் சாப்பிடுவதை ஏராளமான சுற்றுலாப்பயணிகள் கண்டுகளித்து வருகின்றனர்.

மூலக்கதை