​சென்னை மாநகராட்சி அ.தி.மு.க. மாமன்ற உறுப்பினர்களுடன் அமைச்சர்கள் தேர்தல் குறித்து ஆலோசனை

NEWS 7 TAMIL  NEWS 7 TAMIL
​சென்னை மாநகராட்சி அ.தி.மு.க. மாமன்ற உறுப்பினர்களுடன் அமைச்சர்கள் தேர்தல் குறித்து ஆலோசனை

சென்னை மாநகராட்சி அ.தி.மு.க. மாமன்ற உறுப்பினர்களுடன் அமைச்சர்கள் ஆலோசனை கூட்டம் நடத்தினர்.

நிதியமைச்சர் பன்னீர்செல்வம் தலைமையில் சென்னை மாநகராட்சி அ.தி.மு.க. மாமன்ற உறுப்பினர்களுடன் தேர்தல் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.  

அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், பழனியப்பன், எடப்பாடி பழனிச்சாமி, வைத்திலிங்கம், வளர்மதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

மேலும் இக் கூட்டத்தில், சென்னை மாநகராட்சிக்குட்பட்ட சட்டமன்ற தொகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய தேர்தல் நடவடிக்கைகள் குறித்து மாமன்ற உறுப்பினர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது. 

இக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்காததால் மேயர் சைதை துரைசாமி பங்கேற்கவில்லை. துணை மேயர் பெஞ்சமின் கூட்டத்தில் கலந்து கொண்டார். 

மூலக்கதை