ஜார்க்கண்டில் மாவோயிஸ்டுகள் நடத்திய கண்ணிவெடி தாக்குதலில் 4 போலீசார் பலி
ஜார்க்கண்ட் மாநிலத்தில் மாவோயிஸ்ட்டுகள் வைத்த கண்ணிவெடியில் சிக்கி 4 போலீசார் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஜார்க்கண்ட் மாநிலம் சண்டாபூர் கிராமத்திற்கு உட்பட்ட பாலாமு வனப்பகுதியில் துணை ராணுவப் படையினருடன் இணைந்து அம்மாநில போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, மாவோயிஸ்டுகள் வைத்த கண்ணிவெடி தாக்குதலில் போலீஸ் வாகனம் ஒன்று சிக்கியது. இதில், 4 போலீசார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 6 போலீசார் படுகாயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் சத்தீஷ்கர் மாநிலம் தண்டே வாடா மாவட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மூன்று நக்சல்கள் உயிரிழந்தனர். அங்குள்ள வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் மறைந்துள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து குறிப்பிட்ட இடத்தை முற்றுகையிட்டு போலீசார் அதிரடி தாக்குதல் நடத்தினர். இதில் சம்பவ இடத்திலேயே மூன்று நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். தப்பியோடிய மாவோயிஸ்ட்டுகளை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
