​சமத்துவ மக்கள் கட்சியிலிருந்து எர்ணாவூர் ஏ.நாராயணன் உள்ளிட்ட நிர்வாகிகள் நீக்கம்

NEWS 7 TAMIL  NEWS 7 TAMIL
​சமத்துவ மக்கள் கட்சியிலிருந்து எர்ணாவூர் ஏ.நாராயணன் உள்ளிட்ட நிர்வாகிகள் நீக்கம்

சமத்துவ மக்கள் கட்சியின் துணைத் தலைவர் எர்ணாவூர் ஏ.நாராயணன் எம்.எல்.ஏ உள்ளிட்ட நிர்வாகிகள், கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக அக்கட்சியின் தலைவர் சரத்குமார் அறிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சமத்துவ மக்கள் கட்சியில் இருந்து பொதுச் செயலாளர் கரு.நாகராஜன், தலைமை நிலையச் செயலாளர் ஐஸ் அவுஸ் தியாகு, மாவட்டச் செயலாளர்கள் ராஜா, பிரசாத் உள்ளிட்டோர் பாஜக-வில் இணைந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளதாக தெரிவித்துள்ளார். 

எனவே, அவர்கள் வகித்து வந்த பொறுப்புகளில் இருந்தும், அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் நீக்கப்படுவதாக சரத்குமார் அறிவித்துள்ளார். இதேபோல் கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட துணைத் தலைவர் எர்ணாவூர் ஏ.நாராயணன் எம்.எல்.ஏ-வும் நீக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

இந்நிலையில், சென்னை தலைமை அலுவலகத்தில் நாளை கட்சி நிர்வாகிகளின் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளதாகவும்  சரத்குமார் கூறியுள்ளார். 

மூலக்கதை